
வயல்களுக்கு ஏற்படும் நோய் நிலைமைகளை ஆராய கள விஜயம்
டித்வா புயல் தாக்கத்தின் பின்பு நெல் வயல்களுக்கு ஏற்படும் நோய் நிலைமைகளை ஆராய்யும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்,விவசாய போதனாசிரியர் உள்ளிட்டோர்.மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குற்பட்ட பகுதிகளில் கள விஜயத்தினை மேற்கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் தெரிவிக்கையில்,
டித்வா புயல் தாக்கத்தின் பின்பு நெல் வயல்களில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் கபில நிறத்தத்திகளின் தாக்கத்தையும் அவதானிக்க முடிகின்றது.
விவசாயிகள் சிபார்சு செய்த மருந்துகளை விவசாய போதனாசிரியரின் அறிவுறுத்தலுக்கமைய விசுறி கட்டுப்படுத்த வேண்டும்.
மஞ்சலாதலுக்கான காரணங்களை தொடர்ச்சியாக அவதானித்து விவசாயிகள் இனங்கண்டு கொள்வதுடன் இப் பூச்சி தாக்கம் ,பங்கசு தாக்கம், போசணை பற்றாக்குறை போன்றவற்றினாலும் மஞ்சலாதல் எட்டப்படக் கூடும் என தெரிவித்தார்.
