இடரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி

-மூதூர் நிருபர்-

சுனாமி தினத்தை முன்னிட்டு மூதூரிலுள்ள 200 மாணவர்களுக்கு மூதூர் -அல்மனால் வித்தியாலயத்தில் வைத்து புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பரக்கா சரிட்டி அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.முஜீப்பினால் இவ் புத்தகப் பைககள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த இயற்கை அனர்த்தத்தினால் மூதூரிலுள்ள பல மாணவர்கள் கற்றல் உபகரணங்களை இழந்திருந்தனர்.இந்நிலையில் மூதூர் ஈராக் விளையாட்டுக்கழகப் விடுத்த கோரிக்கைக்கு அமைவைக இவ் புத்தக பைகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.