அளுத்கம-மத்துகம விபத்து – சிறுமி உயிரிழப்பு

வெலிபென்ன பொலிஸ் பிரிவில் உள்ள அளுத்கம-மத்துகம வீதியில் 5ஆவது தூண் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த அவரது தந்தை மற்றும் தாயார் மேலதிக சிகிச்சைக்காக நாகொட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார், வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.