மஸ்கெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை

-மஸ்கெலியா நிருபர்-

கடந்த சில மாதங்களாக மஸ்கெலியா நகரில் அதிகளவில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது.

இதனால் நகரில் உள்ள வர்த்தகர்கள், பாவனையாளர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள் பெரும் பீதியின் மத்தியில் நடமாட வேண்டியுள்ளது.

இதனை கட்டுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை முன் வர வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.