
கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைக்காக களமிறங்கும் விசேட ரயில்கள்!
கிறிஸ்துமஸ் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வார இறுதியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
விசேட சேவைகளின் விபரங்கள்:
1. மருதானை – மாத்தறை விசேட கடுகதி புகையிரதம்:
புறப்பாடு: டிசம்பர் 24 இன்று புதன்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி
மீள் வருகை: டிசம்பர் 29 அதிகாலை 5:00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்பட்டு, காலை 8:30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
2. கொழும்பு கோட்டை – கன்கேசன்துறை நகரிடை (Intercity) புகையிரதம்:
சேவை நாட்கள்: டிசம்பர் 25 மற்றும் டிசம்பர் 28 ஆகிய திகதிகளில் இந்தச் சேவை இடம்பெறும்.
நேரம்: காலை 5:45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, நண்பகல் 12:15 மணிக்கு கன்கேசன்துறையை சென்றடையும்.
மீள் வருகை: அதே தினங்களில் பிற்பகல் 1:50 மணிக்கு கன்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
இந்த ரயில் சேவையில் 9 குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் ஏற்படும் அதிகபடியான பயணிகளின் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் இந்த மேலதிக சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
