பதுளையில் 68 சதவீதமான நிலப்பரப்பு அபாயத்தில் …..

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 68 சதவீதமான நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதகமான வானிலை காலத்தில் பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 மண்சரிவுகள், இடம்பெற்றுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்தார்.

இதன் விளைவாக, இதுவரை சுமார் 650 உயர் ஆபத்துள்ள வீட்டு அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.