நாட்டின் சில மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் சில மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.