
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென்கிழக்கு தாய்வானிலுள்ள கடலோர மாவட்டமான டைடுங்கில் இன்று புதன்கிழமை பிற்பகல்; 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 11.9 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைபே நகரில் உள்ள கட்டடங்களும் அதிர்ந்துள்ளன.
