தனியார் ஊடகமொன்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறைப்பாடு

தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பியதற்காக தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒளிபரப்பு உரிமங்களை வழங்குவதற்கான முறையான அதிகாரியாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் குறித்த ஊடகவலையமைப்பிற்கும் இடையே தொடர்ச்சியான பொது மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த முறைப்பாட்டை நிராகரிப்பதாக அந்த தனியார் ஊடகம் பதிலளித்துள்ளது.
எனினும் பொலிஸ் விசாரணைகளின் போது அவ்வாறான செய்தி வெளிப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டாலும் அத்தகைய செய்தி இருப்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் மற்றும் செய்தி மூலங்கள் எம்மிடம் இருப்பதால் பொலிஸ் ஊடகப் பிரிவு எடுத்த நிலைப்பாட்டை உறுதியாக நிராகரிக்கிறது என்பதை பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.