“மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள நூலகத்தினால் ஏற்பாடு செய்த “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு விநாயகபுர நூலகத்தில் இடம்பெற்றது.
விநாயகபுர நூலக உதவியாளர் பூவேனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் சனசமூக நிலைய உத்தியோகஸ்தர், A.ஹாரூன், நூலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதேவேளை, தெரிவு செய்யப்பட்ட சிறந்த வாசகருக்கு நினைவு சின்னமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சமூக சேவகர் ஒருவரினால் நூலகங்களுக்கு புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

