
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.7 பில்லியன் டொலராக உயர்வு
இலங்கையின் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் 5.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜனவரி முதல் நவம்பர் வரை பொருட்கள் ஏற்றுமதி மூலம் 12,417.98 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 6.41% அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நவம்பர் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 311.3 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 11 மாதங்களில் சேவைகள் ஏற்றுமதி 3,358.38 மில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.
2025 நவம்பர் மாதத்தில் மாத்திரம் 1,364 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது 2024 நவம்பரை விட 5.56% வளர்ச்சியாகும்.
அத்துடன் இலங்கை அரசங்கம் 2025 ஆம் ஆண்டுக்காக 18 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காக நிர்ணயித்திருந்தது.
இதன்படி நவம்பர் இறுதிக்குள் வருடாந்த ஏற்றுமதி இலக்கில் 86.3 சதவீதத்தை இலங்கை எட்டியுள்ளது” என மங்கள விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
