
ஸ்மிருதி மந்தனா உலக சாதனை
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை மற்றும் முதல் ஆசிய வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் சுசி பேட்ஸைத் (நியூசிலாந்து) தொடர்ந்து, இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீராங்கனை இவராவார்.
இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் 25 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், தனது 153-வது போட்டியில் இந்தச் சாதனையை அவர் எட்டினார்.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்மிருதி மந்தனாவின் இந்த மைல்கல் சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
