மட்டக்களப்பு மார்க்க புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மார்க்கமூடன புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைய அனர்த்தம் காரணமாக பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவிற்கும் இடையிலான கல்லெல்ல பகுதியில் உள்ள புகையிரத பாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கு மார்க்கமூடான புகையிரத சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்று புகையிரத சேவைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.