
சத்தியக்காட்டு சந்தையில் கடைத்தொகுதிக்காக அடிக்கல் நாட்டல்
சத்தியக்காட்டு சந்தையில் கடைத் தொகுதியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.
செயல்திறன் அடிப்படையிலான மூலதன மானியங்களை வழங்குதல் திட்டத்தின் கீழ், சத்தியக்காடு சந்தையில் வாழ்வாதார உதிவியை மேம்படுத்தும் நோக்கில் இந்த கட்டடத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன், செயலாளர் பாலரூபன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


