3 இலட்சத்தைக் கடந்த வெளிநாட்டு பணியாளர்கள்

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தொழிலுக்கென வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 300,091ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வருடத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோரை வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கென அனுப்புவதை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இலக்காக கொண்டிருந்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சாதகமான தீர்மானங்கள், தொழில்களை எதிர்பார்பபவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பியமை, தெளிவுபடுத்தல்கள், நலன்புரி வசதிகளை மேம்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களினால் இந்த இலக்கை வருட இறுதிக்கு முன்னர் அடைய முடிடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்த 3வது சந்தர்ப்பம் இதுவாகும்.