சுமார் 20 கோடிக்கும் அதிகமான அந்தரங்க தரவுகள் அம்பலம்!

உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆபாச இணையத்தளங்களில் ஒன்றான போர்ன்கப் ப்ரீமியம் (Pornhub Premium) தரவுகள் பாரிய அளவில் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், தனது சொந்தக் கட்டமைப்புகள் ஊடுருவப்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 கோடிக்கும் அதிகமான தரவுகளை ஒரு தரப்பு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ப்ரீமியம் உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தேடல் விபரங்கள், பார்வையிட்ட காணொளிகள் மற்றும் அவர்கள் இருக்கும் இடம் போன்ற தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இந்தத் தரவுக் கசிவு, பயனர் நடத்தைகளைக் கண்காணிக்கப் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக்ஸ்பெனல் (Mixpanel) எனும் பகுப்பாய்வு சேவையுடன் தொடர்புடையது எனத் தெரியவந்துள்ளது.

போர்ன்கப் (Pornhub) நிறுவனம் 2021 ஆம் ஆண்டிலேயே மிக்ஸ்பெனல் (Mixpanel) உடனான தனது தொடர்பை நிறுத்திவிட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் சேகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் தரவுகளே திருடப்பட்டுள்ளன.