இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் இன்றும் (18)நாளையும் (19) விசேட பாராளுமன்ற அமர்வு முன்னெடுக்கப்படுகிறது.

திக்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 இற்கு ஆரம்பமாகிறது.

திக்வா சூறாவளி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றும் இன்றையதினம் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு திருப்புவதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான 500 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.