நுவரெலியா, கண்டி மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 3ஆம் நிலை ‘சிவப்பு’ மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை நாளை (19) அதிகாலை 2:30 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் டோலுவ, உடதும்பர மற்றும் மெததும்பர பிரதேச செயலகப் பிரிவுகள் (DSD) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், நுவரெலியா மாவட்டத்தில் மதுரட்ட, நில்தந்தஹின்ன, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனே பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.