
லேக் ஹவுஸ் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரை
கொழும்பு கோட்டை லேக் ஹவுஸ் கட்டிடத்தின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த தீ விபத்து இன்று இரவு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த தீயை கொழும்பு மாநகர சபை தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் இந்த முச்சக்கர வண்டி முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
