செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தாதீர்கள் – நடிகை ஸ்ரீலீலா வேண்டுகோள்

 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது குறித்து நடிகை ஸ்ரீலீலா தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் என்பது மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும், அதனைச் சிக்கலாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் AI மூலம் உருவாக்கப்படும் தவறான மற்றும் ஆபாசமான விஷயங்களை யாரும் ஆதரிக்க வேண்டாம் என அவர் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இணையத்தில் பரப்பப்படும் இத்தகைய செயல்கள் மிகவும் அருவருப்பானவை எனத் தெரிவித்த அவர், சக கலைஞர்களுக்காக அனைவரும் துணை நிற்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தொழில்நுட்பத்தை நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்துவதற்கும், தவறான வழியில் கையாளுவதற்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.