ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுதினம்

H.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன்.

இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதன்படி குறித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுதினம் வியாழக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.