
கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு நாளை முதல்
தற்போது ஏற்பட்ட அனர்த்த நிலைமைக் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ 5,000 போஷண கொடுப்பனவை நாளை செவ்வாய்க்கிழமை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போஷாக்கு கொடுப்பனவை அடையாளப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கொடுப்பனவு, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.
