மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் தொழுவ, கங்க இஹலகோரள, உடுதும்பர, மெததும்பர மற்றும் மினிப்பே ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.