
பாடசாலைகள் மீள ஆரம்பாமாவதனை முன்னிட்டு சிரமதானம்
வெள்ளப் பேரனர்த்தத்தின் பின்னர் பாடசாலைகள் வருகின்ற செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதனை முன்னிட்டு பாடசாலைகள் முன்தயார்படுத்தல்களில் ஈடுபடுகின்றன.
பாடசாலைகளின் சுகாதாரம் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி கொமர்சல் வங்கி கிளையினரால் யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றக்கிழமை சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
வங்கிகளும் பாடசாலையும் எனும் தொனிப்பொருளின் கீழ் திருநெல்வேலி கொமர்சல் வங்கியின் முகாமையாளரும் சக ஊழியர்களும் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.



