அடுத்த போகத்தில் நாட்டு அரிசிக்கு அதிக விலை – அமைச்சர் தகவல்

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

சில அரிசி வகைகளைப் பயிரிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் போகத்தில் பயிரிடப்படும் நாட்டு அரிசியைத்தவிர ஏனைய விளைச்சல்களுக்கு அதிக விலையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், பாதிப்பிலிருந்து மீண்டும் எழுவது குறித்த பாரிய அனுபவம் விவசாய சமூகத்தினருக்கே உள்ளது.

இதன்படி, விவசாய சமூகத்தினர் இந்த அழிவிலிருந்து மீண்டும் எழுவார்கள் என்பது குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.