
மட்டக்களப்பு – குவைத் ‘உறவுகளின் உறுதுணை’ அமைப்பினால் மக்களுக்கு உதவி
‘அறிவார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பெயரில் உறவுகளின் மட்டக்களப்பு – குவைத் உறுதுணை அமைப்பினால் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெறுமதியான பொதிகள் கையளிக்கப்பட்டன.
உறவுகளின் உறுதுணை அமைப்பின் தலைவர் கனகரெத்தினம் கர்ணனின் வேண்டுகோளுக்கிணங்க தொழிலதிபர் சுரேஷ் பாவு (இந்தியா-கேரளா) 20,00,000 (இருபது இலட்சம்) பெறுமதியான பொதிகளை குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் டாக்டர்.லக்சித ரத்னாயக்க இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைப்பின் முன்னாள் செயலாளர் த.புண்ணியமூர்த்தி, பொருளாளர் ப.தனஞ்ஜெயன், ஒருங்கிணைப்பாளர் வீ.கவிக்குமார் அங்கத்தவர்களான
ஆ.திலீபன்,பொ.லோகிதன் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



