பேஸ்புக் விருந்து முற்றுகை

தெல்தெனிய காவல் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு விருந்தகத்தில் நடைபெற்ற பேஸ்புக் விருந்தை இன்று (13) அதிகாலை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.

இதன் போது 22 ஆண்களும் 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4,134 மில்லிகிராம் ஐஸ், 1,875 மில்லிகிராம் ஹேஷ், 2,769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கைன், 804 மில்லிகிராம் காளான், 13 மாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.