
வீடுகளை திருத்தம் செய்ய ஆளுனர் தலைமையில் நிதி உதவி
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையால் வீடு புனரமைத்தல் மற்றும் திருத்தப் பணிகளுக்காக வழங்கப்படும் ரூ.2 இலட்சம் நிதி உதவி, பயனாளர்கள் 33 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்ரட்ணசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிதி மூன்று கட்டங்களாக பயனாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது இருப்பிட வீட்டு வசதிகளை மேம்படுத்த ஒரு சாதகமான திட்டமாக எதிந்பார்க்கப்படுகிறது.
இதில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் ஜீ.சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
