யாழ் அரசாங்க அதிபருடன் துரைராசா ரவிகரன் சந்திப்பு

 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ துரைராசா ரவிகரன் நேற்று வெள்ளிக்கிழமை 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய போர்வைகள் மற்றும் கோரிக்கைகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டார்.