
பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி உயிர் மாய்ப்பு
பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 39 வயதான ராஜேஸ்வரி தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி நேற்று வியாழக்கிழமை இரவு சைதாப்பேட்டையில் தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மருந்துகளை உட்கொண்டுள்ளார்.
இதில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் .
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
