
பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிரில் முனசிங்க கைது
பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிரில் முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பதவிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு இடம்பெற்ற 36,001,344.94 ரூபாய் மதிப்பிலான மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
