
நடிகை ஆலியா பட்டுக்கு சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் செங்கடல் திரைப்பட விழாவில் ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிய, ஆசிய மற்றும் உலகளாவிய திரைப்படத் துறையில் ஆலியா பட் ஆற்றிய சிறந்த பங்களிப்பு மற்றும் அவரது அசாதாரண திறமைக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விழா எதிர்வரும் 13-ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.
நடிகர் சல்மான் கான் உட்பட உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
