
நெசவுத் துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவு திருத்தம்
ஊழியர்களுக்கு அஸ்வெசும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளை வழங்குவதற்கான 2025-04-21 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய மேற்குறித்த இயலுமை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்பட்ட போதிலும், தற்போதுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளின் கீழ் நேரடியாக அவர்களுக்கு அவ்வாறான நிவாரணத்தை வழங்குவதற்கான இயலுமை இல்லையெனத் தெரியவந்துள்ளது.
எனவே, குறித்த ஊழியர்களில் தற்போது 5,000/- ருபாவை விடவும் குறைந்த மாதாந்த கொடுப்பனவு பெறும் ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு 2026.01.01 திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ரூபா 5,000/- எனத் திருத்தம் செய்து வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்கு தெரிவித்திருந்தார்,
அதற்கமைய நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
