
கொழும்பு பங்குச் சந்தை உயர்வு
இன்று வியாழக்கிழமை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் உயர்ந்த பெறுமதியைப் பதிவு செய்துள்ளது.
அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 36.85 அலகுகள் உயர்ந்து 22,459.28 ஆகப் பதிவாகியுள்ளது.
இது 0.16%வீத அதிகரிப்பாகும்.
இன்றைய தினத்தின் மொத்தப் புரள்வு 5.5 பில்லியன் ரூபா எனப் பதிவாகியுள்ளது.
