இந்திய வீரர்களுக்கு அபராதம்!

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் 3 ஆம் திகதி ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், மெதுவான ஓவர் வீதத்தை (Slow Over-Rate) கடைப்பிடித்ததற்காக இந்திய வீரர்களுக்கு அவர்களின் போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் குறைவாகப் பந்துவீசியது கண்டறியப்பட்டது.

இதன்படி எமிரேட்ஸ் ஐசிசி எலைட் நடுவர் குழுவின் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணிக்கு இந்த தடையை விதித்தார்.

ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி ஊதியத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

இந்திய அணியின் தலைவர் கே.எல். ராகுல் இந்த விதிமீறலை ஒப்புக்கொண்டு, முன்மொழியப்பட்ட அபராதத்தையும் ஏற்றுக்கொண்டார்.

இதனால் உத்தியோகபூர்வ விசாரணை எதுவும் தேவைப்படவில்லை.

கள நடுவர்கள் ரோட் டக்கர், ரோஹன் பண்டிட், மூன்றாவது நடுவர் சாம் நோகாஜஸ்கி மற்றும் நான்காவது நடுவர் ஜெயராமன் மதனகோபால் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.