600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு

டித்வா சூறாவளி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் புத்தளம் பகுதிக்கு விஜயம் செய்த மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , பாதிக்கப்பட்ட இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக புத்தளம் கடற்கரையோரமாக ஓர் அணைக்கட்டு (embankment) அமைக்கும் சாத்தியம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார்.