ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம

 

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும், வெலிகமவின் முன்னாள் மேயருமான ரெஹான் ஜயவிக்ரம, அக்கட்சியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தனது முடிவை அறிவித்தார்.

“நீண்ட சுய பரிசீலனைக்கு” பின்னரே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய சவால்களுக்கு “புதிய யோசனைகள், கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் மற்றும் நேர்மையான ஈடுபாடு” தேவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகினாலும், தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.