
ஜனாதிபதிக்கும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.
அனர்த்தம் காரணமாக கைத்தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை அதிகாரிகள் இதன்போது சமர்ப்பித்ததுடன், கைத்தொழில் துறையை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில், கைத்தொழில் துறையினருக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
