
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று வியாழக்கிழமை (04) Royal Electronics மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிதி நன்கொடைகளை வழங்கின.
அதன்படி, Royal Electronics நிறுவனத்தின் தலைவர் பெட்ரிக் பெர்னாண்டோ, 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலை மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிறுவனத்தின் இணைத் தலைவர் ஜீவக விஜேசிங்க, பிரதான நிறைவேற்று அதிகாரி மேஜர் (ஓய்வு) ஆனந்த ரொட்ரிகோ ஆகியோர் 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலையையும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தனர்.
