3 நாட்களில் 20,000இற்கும் அதிகமான இரத்த தானங்கள்

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து இரத்தம் வழங்கிய இலங்கை மக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இன்று  புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க, கடந்த மூன்று நாட்களுக்குள் 20,000 இற்கும் அதிகமான இரத்த தானங்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறுகையில், நாளாந்தத் தேவைக்காக 1,500 இரத்த தானங்கள் கோரப்பட்ட போதிலும், அதற்கான பொதுமக்களின் பிரதிபலிப்பு தேவையான தொகையை மீறிவிட்டதாகத் தெரிவித்தார்.

தற்போதைய இரத்த இருப்பு அடுத்த 15 நாட்களுக்குப் போதுமானது என்றும், இது தேசிய இரத்த வங்கியின் செயல்பாடுகளைச் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய உதவியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“தேசிய இரத்த வங்கிக்குத் தேவைப்பட்ட நேரத்தில் உதவிய அனைத்துக் குடிமக்களுக்கும் ஊடகங்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்று மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறினார்.