
கைத்தொழில்களை மீளக் கட்டமைக்க தரவு சேகரிப்பு ஆரம்பம்
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் பொறிமுறையை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
மீளக் கட்டமைப்பதற்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பதே இதன் நோக்கமாகும்.
பாதிக்கப்பட்ட கைத்தொழில் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட தகவல்களைத் தரவு அமைப்பிற்கு கூடிய விரைவில் வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் குறித்து அமைச்சுக்கு அறிவிக்க 071-2666660 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்களை இணையவழி மூலம் https://aid.floodsupport.org/business-impact அல்லது www.industry.gov.lk ஊடாக உள்ளீடு செய்யலாம்.
இந்தத் தரவுச் சேகரிப்புப் பணி 2025 டிசம்பர் 16 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு முன் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
