
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இன்று முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருக்கு எதிராக கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
