கடுவல – பத்தரமுல்ல போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

வெள்ளப்பெருக்கு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கடுவல, பத்தரமுல்ல இடையேயான பிரதான வீதி தற்போது மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளதுனர்.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த வீதியின் சில பகுதிகள் நீரில் மூழ்கின .

நீர் வழிந்தோடுதல் மற்றும் வீதிகளைச் சீரமைத்தல் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வீதி இன்று ( 3) காலை முதல் வழமைபோல் செயற்படுவதற்குத் திறக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர் .