
அனர்த்தம் காரணமாக 783 வீடுகள் முழுமையாக சேதம்
நாட்டில் அனர்த்தம் காரணமாக 783 வீடுகள் முழுமையாக சேதடைந்துள்ளதாக சமீபத்திய நிலைமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 31,417 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
இதன்படி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,433 பாதுகாப்பு மையங்களில் தற்போது 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தொலைதூரப் பகுதிகளுக்கு அணுகல் மேம்படும்போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
