அனர்த்த மரணங்கள் 465 ஆக உயர்வு : 366 பேரை காணவில்லை!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 366 பேர் காணாமல் போயுள்ளனர்.