-மன்னார் நிருபர்-
மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிரதான பாலம் மற்றும் கோந்தை பிட்டி கடற்கரை பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் மீன்பிடி படகுகள் நீரில் மூழ்கின.
குறித்த படகுகளை மீட்கும் பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது
உள்ளூர் மீனவர்கள் மற்றும் ரோலர் உரிமையாளர்கள் இணைந்து மீட்கும் நடவடிக்கை களை முன்னெடுத்த போதும் இதுவரை படகுகளை மீட்க முடியாத நிலையே காணப்படுகிறது.
மன்னார் பிரதான பாலத்தின் ஆழமான பகுதியில் நான்கு ரோலர் படகுகள் முழுமையாக மூழ்கி உள்ளமையால் மீட்கும் பணி வெற்றிகரமாக அமையவில்லை .
இவ்வாறான பின்னணியில் தொடர்ச்சியாக மீனவர்களின் உதவியுடன் படகுகளை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது
மூழ்கிய ரோலர்கள் பல இலட்சம் பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.



