பொலிஸாரின் அவசர உதவிகளுக்கு அழையுங்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை காரணமாகப் பல பகுதிகளில் அதிக மழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், சில பகுதிகளில் பொதுமக்களை வெளியேறுமாறு அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த அவசர நிலைமை குறித்து முறையான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கும், தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும், பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபரின் விசேட நடவடிக்கை மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் தொடர்பில் கீழ் உள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்