சீரற்ற வானிலை -விமான சேவைகள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் விமான சேவைகளும் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலேசியாவிலிருந்து நேற்று (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ‘ஏர் ஏசியா’ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது .விமானம் நேற்று இரவு 9.50 இற்கு இலங்கையை வந்தடையவிருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாகியுள்ளன.

பல விமானங்கள் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.