
மட்டுப்படுத்தப்படும் மலையக மார்க்கத்திலான ரயில் சேவை
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் நாளை (வெள்ளி) காலை 10:00 மணி வரை கொழும்பு கோட்டைக்கும் ரம்புக்கனைக்கும் இடையிலான பகுதிக்கு மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
