
சீரற்ற காலநிலையால் திருகோணமலை மாவட்டத்தில் 2679 குடும்பங்களை சேர்ந்த 7376 பேர் பாதிப்பு!
-கிண்ணியா நிருபர்-
சீரற்ற கால நிலையால் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2679 குடும்பங்களை சேர்ந்த 7376 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் ஒன்பது பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 25.11.2025 – 2025.11.27 மதியம் 12.30 வரையான தகவலின் அடிப்படையில் இன்று வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 433 குடும்பங்களை சேர்ந்த 1545 நபர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 08 குடும்பங்களும், தம்பலகாமம் 140,மொறவெவ 09,சேருவில 10, வெருகல் 15,மூதூர் 750,கிண்ணியா 1600,கோமரங்கடவல 05, பதவிஸ்ரீபுர 42 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பலகாமம் பிரதேச செயல பிரிவில் தி/ஆதிகோனேஸ்வரா இடைத்தங்கல் முகாமில் 14 குடும்பங்களை சேர்ந்த 42 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
